தஞ்சை பெரியகோவில் நிகழ்வுக்கு பின்னரும் பாடம் கற்கவில்லையா? - தமிழில் குடமுழுக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..

தஞ்சை பெரியகோவில் நிகழ்வுக்கு பின்னரும் பாடம் கற்கவில்லையா? - தமிழில் குடமுழுக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..

மதுரை உயர் நீதிமன்றம்

இனிவரும் காலங்களில் குடமுழுக்கின்போது தமிழ்மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கோயில்களில் குடமுழுக்கு நடத்தும்போது இனிவரும் காலங்களில் தமிழ் மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் நாளை நடைபெறும் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கரூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிப்படி  அதாவது தேவார திருவாசம் ஒதி நடத்த உத்தரவிட வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

  Also read... சசிகலா ஓரிரு நாளில் விடுதலையாக வாய்ப்பு?  அந்த மனு நேற்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இனிவரும் காலங்களில் குடமுழுக்கின்போது தமிழ்மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதே போன்ற வழக்குகள் மீண்டும் தாக்கலானால் கோயில் நிர்வாகத்துக்கு பத்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

  மேலும், தஞ்சை பெரிய கோயில் நிகழ்வுக்கு பின்னரும் பாடம் கற்றுக் கொள்ளவில்லையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vinothini Aandisamy
  First published: