Madurai Jallikattu Live: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை

  • News18 Tamil
  • | January 15, 2020, 11:14 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    17:35 (IST)

    சிறந்த காளைக்கான முதல்  பரிசு புதுப்கோட்டையைச் சேர்ந்த பெண்  காவல் ஆய்வாளர் அனுராதா   என்பவருக்கு( தற்போது இவர் தஞ்சாவூரில் பணி புரிகிறார்) வழங்கப்பட்டது. 
    சிறந்த காளைக்கான   இரண்டாம்  பரிசு கார்த்திக்      என்பவருக்கும் 

    சிறந்த காளைக்கு  3-ம்   பரிசு ரவி என்பவருக்கும் வழங்கப்பட்டது. 

    16:43 (IST)

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு  காயமடைந்தவர்கள் விபரம்

    மொத்தம் 71

    வீரர்கள் 45

    மாடு உரிமையாளர்கள்  13
    பார்வையாளர்கள் 13


    உயர் சிகிச்சைக்காக 10 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    16:34 (IST)

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. பரிசு வழங்கும் போட்டி நடைபெறவுள்ளது. 

    15:57 (IST)

    அவனியாபுரம்  ஜல்லிகட்டு,  காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை  4 மணிக்கு முடிவடைய வேண்டும். 
    ஆனால் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இருப்பதால் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    15:36 (IST)

    அவனியாபுரம் ஜல்லிகட்டு : 8 வது  சுற்று  தொடங்கியது. 8-வது சுற்றில் அனுமதிக்கப்பட்ட 75 வீரர்களில் 10 வீரர்கள் வராதததாலும், ஒரு வீரர் மருத்துவச் சோதனையில் தகுதி பெறாததாலும் மொத்தம் 64 வீரர்கள்  அனுமதிக்கப்பட்டனர். அதைத்தவிர, 7-வது சுற்றில் சிறப்பாக விளையாடி  காளைகளைத் தழுவிய 3 பேர் என மொத்தம் 67 மாடுபிடி வீரர்கள்  களத்தில் உள்ளனர்.
     

    15:33 (IST)

    மது போதையின் காரணமாக மூன்று வீரர்கள் தகுதி நீக்கம்: 
    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான சோதனையில் மூன்று பேர் போதையில் வந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களது டோக்கன் மற்றும் சீருடை திரும்பப் பெறப்பட்டது.

    14:13 (IST)

    ஆறாவது சுற்று முடிவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு  காயமடைந்தவர்கள் விபரம்


    மொத்தம் 43

    வீரர்கள் 33

    மாடு உரிமையாளர்கள்  7
    பார்வையாளர்கள் 3

    8 பேர் உயர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    12:38 (IST)

    அவனியாபுரம் ஜல்லிகட்டு  :  5  வது  சுற்று  தொடங்கியது .  

    ஒரு மணி நேரம் நடைபெறும் இந்தச்  சுற்றில் 75 வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 5-வது சுற்றில் அனுமதிக்கப்பட்ட 75 வீரர்களில் 9 பேர் வராததால் 66 வீரர்கள்  அனுமதிக்கப்பட்டனர். 4-வது சுற்றில் சிறப்பாக விளையாடி காளைகளைத் தழுவிய 4 பேர் என மொத்தம் 70   மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.

    11:49 (IST)

    வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளைகள் கூட்டத்தில் பாய்வதால், காயமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுவரையில் 21 பேர் படுகாயமைடந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.


    11:43 (IST)

    நான்காவது சுற்றுக்கு 75 வீரர்களுக்கு  அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  4-வது சுற்றில் 75 வீரர்களில் 15 வீரர்கள்  வராததால், 60 வீரர்கள்  அனுமதிக்கப்பட்டனர்.  மேலும், 3-வது சுற்றில் சிறப்பாக காளைகளைத் தழுவிய 3 பேர் என மொத்தம் 63 மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    உழவனின் நண்பன் என அழைக்கப்படும் காளைகள் பொங்கல் பண்டிகையின் முக்கிய அங்கமாக பார்க்கப்படுகின்றன. இதனால் இந்த காளைகளை வைத்து நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழர்களின் பாரம்பரியமாக உள்ளது. காளைகளை அடக்குபவர்களுக்கு தான் பெண் கொடுக்கப்படும் என்ற சூழல் எல்லாம் முன்பு தமிழகத்தில் இருந்தது. இத்தனை சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 680 வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றுள்ளன.