Jallikattu: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு - சீறி பாய்ந்த 26 காளைகளை பிடித்த 2 வீரர்களுக்கு முதல் பரிசு
26 காளை அடக்கி, முத்துபட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ஜெய்கிந்த் புரம் விஜய் ஆகிய இருவரும் முதல் பரிசை வென்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டு
- News18 Tamil
- Last Updated: January 14, 2021, 4:36 PM IST
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றுவந்த ஜல்லிக்கட்டு போட்டி, நிறைவடைந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிகட்டு, மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. முடிவுறும் சூழலில் கனமழை பெய்ததால், போட்டி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. மேலும், ஏராளமான மாடுகள் அதிகாலை முதலே வரிசையில் நின்று காத்திருந்து போட்டியில் பங்கேற்றன. கடைசி நேரத்தில் சில மாடுகள் பங்கேற்கமுடியாமல் போனது. இதனால், அதன் உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இன்றைய போட்டியில், 400 வீரர்கள் களம் கண்டுள்ளனர். 530 காளைகள் வாடிவாசலை கடந்து களம் கண்டு சென்றுள்ளன. மொத்தம் 8 சுற்றுகள் நடைபெற்றது. ஒரு சுற்றுக்கு ஒரு மணி நேரம் வீதம் மொத்தம் 50 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் 26 காளை அடக்கி, முத்துபட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ஜெய்கிந்த் புரம் விஜய் ஆகிய இருவரும் முதல் பரிசை வென்றுள்ளனர். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைத்தார். பிற்பகலில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரசின் ராகுல்காந்தி, கேஸ் அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்று, போட்டியை கண்டுகளித்தனர்.

இதையடுத்து, மதுரை அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது.
இன்றைய போட்டியில், 400 வீரர்கள் களம் கண்டுள்ளனர். 530 காளைகள் வாடிவாசலை கடந்து களம் கண்டு சென்றுள்ளன. மொத்தம் 8 சுற்றுகள் நடைபெற்றது. ஒரு சுற்றுக்கு ஒரு மணி நேரம் வீதம் மொத்தம் 50 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் 26 காளை அடக்கி, முத்துபட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ஜெய்கிந்த் புரம் விஜய் ஆகிய இருவரும் முதல் பரிசை வென்றுள்ளனர்.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயலும் மாடுபிடி வீரர்கள்.
இதையடுத்து, மதுரை அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது.