அபராதம் விதித்த போலீசார்... ட்ரான்ஸ்பார்மரில் கை வைத்து தற்கொலை..!

மின்மாற்றியில் கை வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

அபராதம் விதித்த போலீசார்... ட்ரான்ஸ்பார்மரில் கை வைத்து தற்கொலை..!
ஆட்டோ டிரைவர் தற்கொலை
  • News18
  • Last Updated: February 3, 2020, 8:25 AM IST
  • Share this:
மதுரையில் போக்குவரத்து விதியை மீறிய காரணத்திற்காக போலீசார் அபராதம் விதித்ததால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் அளவுக்கு அதிகமான பயணிகளுடன் சென்ற ஆட்டோக்கள், ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள் என மொத்தம் 600 ஆட்டோக்கள் சிக்கின.

இவற்றிற்கு போக்குவரத்து போலீசார் தலா 2 ஆயிரத்து 200 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர். இந்த அபராத தொகையை கட்ட முடியாமல் தவித்த சோலையழகுபுரத்தைச் சேர்ந்த அரிச்சந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுநர், கடந்த 28-ம் தேதி அன்று மின்மாற்றியில் கை வைத்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த அவர், உயிரிழப்பதற்கு முன்னதாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.


First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்