தமிழகத்தில் மேலும் ஒரு பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம்

தமிழகத்தில் பிராமணர் அல்லாத மேலும் ஒருவர் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயிலில் அச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மேலும் ஒரு பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம்
விநாயகர் (கோப்புப்படம்)
  • Share this:
தமிழகத்தில் பிராமணர் அல்லாத மேலும் ஒருவர் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தனிச்சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் ஆகம பயிற்சி நிலையங்களில் பிராமணர் அல்லாதவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வழங்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக 205 நபர்கள் அர்ச்சகராக பயிற்சியை முடித்தனர்.

அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் முதல்முறையாக பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.

Also read: இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உச்சிமாநாடு - முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு


கடந்த 2018ம் ஆண்டு தள்ளாகுளம் ஐயப்பன் கோயிலில் மாரிச்சாமி என்பவர் அர்ச்சகராக பொறுப்பேற்ற நிலையில், தற்போது இரண்டாவதாக மதுரையை சேர்ந்த தியாகராஜன், நாகமலையில் இந்து சமயத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விநாயகர் கோயிலில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading