HOME»NEWS»TAMIL-NADU»madurai alanganallur jallikattu finished vjr

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு.. சிறந்த காளை, காளையர் அறிவிப்பு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கியது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு.. சிறந்த காளை, காளையர் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு
  • Share this:

தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் ஜனவரி 14-ம் தேதி நடைபெற்றது. இதில், 430 வீரர்ர்களும், 788 காளைகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் வருகை தந்தனர்.

அவனியாபுரத்தை தொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 600 மாடிபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கியது. 8 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகமாக 12 காளைகளை தழுவிய கண்ணன் என்ற வீரருக்க முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த கருப்பண்ணன் என்பவருக்கு 2 நாட்டுக்கறவை மாடுகள் பரிசாகவும், 3-ம் இடம் பிடித்த சக்தி என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.  இதேப்போன்று சிறந்த காளையாக குருவித்துறை சந்தோஷ் காளை முதல் பரிசை வென்றுள்ளது. அலங்காநல்லூரில் பரிசு வென்ற காளை மற்றும் காளையர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிசுகளை வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.



 
Published by:Vijay R
First published: