Madurai Alanganallur Jallikattu 2020 Live | மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை

Madurai Alanganallur Jallikattu 2020 Live | உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நேரலையாக

  • News18 Tamil
  • | January 17, 2020, 07:02 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    7:43 (IST)

    மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | தொடர் நேரலை

    17:40 (IST)

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:

    மொத்தம் 739 காளைகள் களமிறங்கியுள்ளன. 688 வீரர்கள் களத்தில் இருந்துள்ளனர். 36 பேர் காயமடைந்துள்ளனர். 

    முதலிடம் பிடித்த காளை: மாறநாடு குளமங்கலம் காளை

    இரண்டாம் இடம் பிடித்த காளை: போலீஸ் எஸ்.ஐ அணுராதாவின் காளை

    மூன்றாமிடம் பிடித்த காளை: ஜி.ஆர் கார்த்திக் என்பவரின் காளை

    16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் முதலிடம், 14 காளைகளை அடக்கிய ஆழகர்கோவில் கார்த்திக் இரண்டாம் இடம், 13 காளைகளை அடக்கிய அரிடாப்பட்டி கணேசன் மூன்றாம் இடம்.

    17:36 (IST)

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: 16 காளைகளை மடக்கிய ரஞ்சித் குமார் முதலிடம் பிடித்தார்

    16:21 (IST)

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேரம் அரை மணி நேரம் நீடிப்பு

    15:34 (IST)

    அழகர் கோவிலை சேர்ந்த வளையப்பட்டி கார்த்திக் தற்போது வரை 12 காளைகளை பிடித்து முதல் இடத்தில் உள்ளார்.

    15:20 (IST)

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்து அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் பார்வையிட்டனர்.

    8:45 (IST)

    அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்வர், துணைமுதல்வர் சார்பில் காளை மற்றும் காளையர்களுக்கு பரிசு

    அலங்காநல்லூர் ஜல்லிகட்டு களத்தில் அதிக காளைகளை தழுவிய சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட உள்ளது.
     தமிழக. துணை  முதல் அமைச்சர்    ஓ. பன்னீர் செல்வம்  சார்பில்  இந்த பரிசு வழங்கப்படுகிறது .

    களத்தில்  சிறப்பாக நின்று வீரர்களை புறமுதுகிட்டு ஓட வைக்கும்    சிறந்த  காளைக்கு முதல் பரிசாக கார்  காத்திருக்கிற து. 
     தமிழக முதலமைச்சர்   எடப்பாடி பழனிசாமி   சார்பில்  இந்த பரிசு வழங்கப்படுகிறது.

    8:12 (IST)

    ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்கள் கேலரி நீக்கம்; வெளிநாட்டினருக்கு ஒதுக்கீடு

    மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வந்த கேலரியை இனி போராட்ட மாணவர்கள் கேலரி என போராட்டத்தின் போது அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த கேலரியில் மாணவர்கள் மட்டும் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அந்த கேலரி தமிழக சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்பட்டு வெளிநாட்டினர் மட்டும் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

    7:40 (IST)

    ஒரு சுற்று ஒரு மணி நேரம் நடைபெறும்.  ஒரு சுற்றுக்கு 75 மாடுபிடி   வீரர்கள் அனுமதிக்கப்படுவர்கள்.