ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளது. பல திரைப்படங்கள் ஓடிடி முறையில் வெளியிடப்பட்டு வருகின்றன.
திரையரங்கு எப்போது திறக்கப்படும் , நடிகர்களின் திரைப்படம் எப்போது திரையிடப்படும் என்கிற கேள்விக்கு இதுவரை விடை இல்லாத நிலை மதுரையில் அஜித் ரசிகர்கள் சிலர் விநோதமான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.
அதில் உறுதிமொழி என தலைப்பிட்டு சில கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதன்படி நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையிடப்படும் வரை வேறு எந்த திரைப்படத்தையும் காண மாட்டோம் என சபதம் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகளுக்கு கெடுபிடி விதித்திருக்கும் சூழலில் தீபாவளியில் வலிமை திரைப்படம் வரும் என காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு அதற்கான அறிகுறி தெரியாததால், விரக்தியில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ரசிகர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஒருபுறம் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் எதில் வெளியாகப் போகிறது என்கிற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், திரையில் தான் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தை பார்ப்போம் என அஜித் ரசிகர்கள் முன்கூட்டியே சபதம் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.