ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரை எய்ம்ஸ் தலைவராக மருத்துவர் நாகராஜன் வெங்கடராமன் நியமனம்..!

மதுரை எய்ம்ஸ் தலைவராக மருத்துவர் நாகராஜன் வெங்கடராமன் நியமனம்..!

மதுரை எய்ம்ஸ் தலைவர் நியமனம்

மதுரை எய்ம்ஸ் தலைவர் நியமனம்

Madurai aims | ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai | Tamil Nadu

  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக மருத்துவர் நாகராஜன் வெங்கடராமனை மத்திய அரசு நியமித்துள்ளது.

  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு 2018 ஜூனில்தான் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. அதன் பின்னர் 6 மாதங்கள் கழித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2019-ல் பாராளுமன்ற தேர்தல் நெருங்கிய வேளையில் 27.01.2019 அன்று மதுரை எய்ம்ஸ்க்கு  அடிக்கல் நாட்டப்பட்டது.

  ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் கட்டோச் பதவி வகித்து வந்தார்.

  ALSO READ | ’தீபாவளியன்று சரவெடி பட்டாசு வெடிக்காதீங்க...’ - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை!

  இந்நிலையில், தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக உள்ள நாகராஜன் வெங்கடராமனை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Aiims Madurai, Madurai