முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் - மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் - மத்திய அரசு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த திட்டத்தின் மொத்த திருத்தப்பட்ட செலவு ரூ.1,977.8 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை அக்டோபர் 2026 க்குள் கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

மதுரையை சேர்ந்த K.K.ரமேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

Also Read :  பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க சூர்யா சிவாவுக்கு தடை - அண்ணாமலை உத்தரவு

இந்நிலையில், இன்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம், மார்ச் 2021 முதல் அக்டோபர் 2026 வரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என திட்டமிடப்பட்டு உள்ளதாக  விளக்கமளித்துள்ளது.

மேலும் மதுரை மாவட்டம் தோப்பூரில் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்டத்தின் மொத்த திருத்தப்பட்ட செலவு ரூ . 1,977.8 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் விளக்கமளித்துள்ளது.

First published:

Tags: AIIMS, Aiims Madurai, Madurai High Court