Home /News /tamil-nadu /

எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மாநில அரசு நிலத்தை இன்னும் ஒப்படைக்க வில்லை- ஆர்.டி.ஐ. தகவல்

எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மாநில அரசு நிலத்தை இன்னும் ஒப்படைக்க வில்லை- ஆர்.டி.ஐ. தகவல்

எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மாநில அரசு நிலத்தை இன்னும் ஒப்படைக்க வில்லை- ஆர்.டி.ஐ. தகவல்

மதுரை எய்ம்ஸ்க்கான நிலத்தை இன்னும் மாநில அரசு ஒப்படைக்க வில்லை என மத்திய சுகாதர துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மதுரை தோப்பூரில் 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 224.24 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று, 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நவம்பர் மாதம் தொடங்கியது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் மதுரை எய்ம்ஸ்க்கான நிலத்தை இன்னும் மாநில அரசு ஒப்படைக்க வில்லை என மத்திய சுகாதர துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆவலர் பாண்டியராஜன் மத்திய சுகாதார துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்படும், மாதிரி வரைபடம் கிடைக்குமா, கடன் உதவிகள் கிடைத்தா உள்ளிட்ட 17 கேள்விகள் கேட்டு தகவல் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பி விண்ணப்பித்துள்ளார்.

    இதற்கு பதில் அளித்த ஆர்.டி.ஐ. , எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மாநில அரசு நிலத்தை இன்னும் ஒப்படைக்க வில்லை என பதில் அளித்துள்ளது. எய்ம்ஸ் கட்ட ஜிக்காவிடம் கடன் பெறும் நடவடிக்கை இன்னும் முடியவில்லை எனவும் அதற்கான ஒப்பந்தமும் முடியவில்லை எனவும் இதில் தரப்பட்டுள்ளது மேலும் இதற்கான மாதிரி வரைபடம் உள்ளிட்ட 17 கேள்விகளை அவர் கேட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது எனவே எப்போது பணி முடியும் என்பது கேள்வி குறியாகியுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Aiims Madurai, Central government, Madurai

    அடுத்த செய்தி