Home /News /tamil-nadu /

வாடகை கட்டிடத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை - மத்திய அரசு முடிவு

வாடகை கட்டிடத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை - மத்திய அரசு முடிவு

மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வாடகை கட்டிடத்தில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை செயலளார் ராதாகிருஷ்ண்ன் தெரிவித்துள்ளார்.

    மதுரையில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முதல்வர் முக ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார்.

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு 90 சதவீதம் செய்து முடித்துள்ளது. தற்காலிகமாக நடப்பாண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு கொள்கை ரீதியாக கூறியுள்ளது. உயர் நீதிமன்ற வழக்கில் மத்திய அரசு கட்டிடம் கட்டி முடிக்கும் வரை வாடகைக் கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைய நடத்துவதற்கு தயார் என்றும், அதற்கான வாடகையையும் தருவதாகக் கூறியுள்ளது. மதுரை மாவட்ட மக்கள், மட்டுமில்லாது தமிழக மக்களும் எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்காமல் விரைவில் பயன்பாட்டிற்கும் வர வேண்டும் என விரும்புகின்றனர்.

    இந்த மருத்துவமனை புறநோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவாக மட்டுமே செயல்படாமல் ஆராய்ச்சி ரீதியாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்காலிக கட்டிடம் தேர்வு செய்வவது குறித்தும், அதற்கான வசதிகளை ஏற்படுத்துவது பற்றியும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    Also Read : வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகைளயும், அதன் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர், சென்னைக்கு 20 ஆம் தேதி வர இருக்கிறார்கள். அவர்களிடம் எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை, தற்காலிக கட்டிடம், விரைவில் கட்டுமானப்பணியை தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: AIIMS

    அடுத்த செய்தி