முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 2028ம் ஆண்டுதான் மதுரை எய்ம்ஸ்.. அமைச்சர் சொன்ன பதில்..!

2028ம் ஆண்டுதான் மதுரை எய்ம்ஸ்.. அமைச்சர் சொன்ன பதில்..!

மதுரை எய்ம்ஸ் - அமைச்சர் பதில்

மதுரை எய்ம்ஸ் - அமைச்சர் பதில்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் பிரதமர் மோடியால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டப்பட்டது. அதன்பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மக்களவையில் திமுக எம்பிக்களுக்கும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான நிதியை முந்தைய அதிமுக அரசு கேட்டு பெற தவறிவிட்டதாக சாடினார். தமிழ் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு இடம் தேர்வு செய்வதில் தொடங்கி, தற்போது மருத்துவமனை கட்டுமான பணி தொடங்குவது வரை பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. அதிமுக ஆட்சியில் இந்த மருத்துவமனையை தஞ்சாவூருக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது ஆனால், மத்திய அரசு, மதிப்பெண்கள் அடிப்படையில் மதுரையை தேர்வு செய்தது என்று கூறினார்.

' isDesktop="true" id="889843" youtubeid="01cNYIKM1rc" category="tamil-nadu">

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமைச்சர் உதயநிதி, ஒற்றை செங்கலைக் காண்பித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி இதுவரை தொடங்கவில்லை என்று கிண்டலடித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு தொடங்கி 2028ஆம் ஆண்டு முடிவடையும் என்றும் அமைச்சர் கூறினார்.

First published:

Tags: Aiims Madurai, Ma subramanian