தனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரின் மகளை நேரில் அழைத்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கௌரவப்படுத்தினார்.

தனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு
சலூன் கடைக்காரன் மோகன் மற்றும் குடும்பத்தார்
  • Share this:
பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரின் மகளை நேரில் அழைத்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கௌரவப்படுத்தினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு தனது மகளின் எதிர்கால படிப்பிற்காக சேமித்து வைத்த பணத்தை, மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரரான மோகன் வழங்கினார். இதனை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை ஆட்சியர் ஆகிய இருவரும் மோகனின் குடும்பத்தை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கவுரவப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பிரபு என்பவர், மாணவியின் எதிர்காலத்திற்காக 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

Also see:
First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading