மதுரை ஆதினம் அருணகிரிநாதர் காலமானார்

மதுரை ஆதீனம் காலமானார்

சுவாசக் கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம் காலமானார்.

  • Share this:
    மதுரை ஆதின மடத்தின் 292வது குருமகா சன்னிதான பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (77). இவர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    நேற்று காலை முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடம் ஆனதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவிந்திருந்தது. இந்நிலையில், இன்று இரவு சிகிச்சை பலனின்றி மதுரை ஆதினம் காலமானார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published: