ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிவகங்கை மாவட்டத்தை மருதுபாண்டியர்கள் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் : மதுரை ஆதீனம் கோரிக்கை!

சிவகங்கை மாவட்டத்தை மருதுபாண்டியர்கள் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் : மதுரை ஆதீனம் கோரிக்கை!

மருது பாண்டியர் உருவச்சிலைக்கு மதுரை ஆதீனம் மரியாதை

மருது பாண்டியர் உருவச்சிலைக்கு மதுரை ஆதீனம் மரியாதை

மத்திய அரசு மருது பாண்டியர்களின் நினைவாக தபால்தலை வெளியீட்டு  அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Sivaganga, India

  சிவகங்கை மாவட்டத்தை மருதுபாண்டியர்கள்  மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மருதுபாண்டியர் நினைவாக அஞ்சல் தலை வெளியிட வேண்டும் மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விடுதலைப் போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 221 வது நினைவு நாள் மணி மண்டபத்தில் அக்டோபர் 24ஆம் தேதி  அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மருதுபாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடக்கி வைத்தார். அதனை தொடர்ந்து சமுதாய மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

  மருதுபாண்டியர்களின் 221-வது நினைவு நாள் விழாவில் கலந்து கொண்டு மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவத்து மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ  ஹரி ஹர தேசிய சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம், வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த மருது பாண்டியர்கள்  திருஞானசம்பந்த பெருமானுக்குக்கு வெள்ளித்தேர் செய்து கொடுத்தவர்கள் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக மருதுபாண்டியர் நினைவு விழாவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம் என்றார்.

  இதையும் படிங்க: மேலும் தீவிரமெடுக்கும் சித்ரங் புயல் - எந்தெந்த பகுதிகளில் அலெர்ட்!

  மாணவர்களுக்கு மருது பாண்டியர்களின் வரலாறு தெரியவில்லை என பேசிய மத்திய, மாநில அரசுகள் மருதுபாண்டியகளின் வரலாறு பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்றும்  அப்போது தான் வருங்கால சந்ததியினர்  அறிய முடியும் என்றார்.  சிவகங்கை மாவட்டத்திற்கு மருது பாண்டியர்கள் மாவட்டம் என அறிவிக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்த மதுரை ஆதீனம், சுதந்திர போராட்ட தியாகிகள் எல்லாம் மறந்து விட்டார்கள் அவர்களை நாம் நினைவு கூற வேண்டும் , மத்திய அரசு மருது பாண்டியர்களின் நினைவாக தபால்தலை வெளியீட்டு  அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

  செய்தியாளர்: முத்துராமலிங்கம்

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Sivagangai