கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க ரோபோ கண்டுபிடித்த இளைஞர்..

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க ஏதுவாக நவீன வசதிகள் கொண்ட ரோபோ ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார் மதுரையை சேர்ந்த இளம் பொறியாளர்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க ரோபோ கண்டுபிடித்த இளைஞர்..
நவீன வசதிகள் கொண்ட ரோபோ
  • Share this:
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க ஏதுவாக நவீன வசதிகள் கொண்ட ரோபோ ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார் மதுரையை சேர்ந்த இளம் பொறியாளர்.

மதுரை அய்யர் பங்களா பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான சுந்தரேசன். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் முன்கள பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தகுந்த பாதுகாப்புகளோடு இவர்கள் கிருமிநாசினி தெளித்தாலும் இவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் ரோபோ ஒன்றை கிருமிநாசினி தெளிக்கும் பணிக்காக வடிவமைத்துள்ளார் சுந்தரேசன்.


மொபைல் செயலி மூலம் இயங்கும் இந்த ரோபோ பொது இடங்களில் 20 அடி தூரமும், வீடு, அலுவலகங்களில் 6 அடி தூரமும் தள்ளி நின்று பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 9 கிலோ எடை கொண்ட இந்த ரோபோவில் 4 லிட்டர் கிருமி நாசினிக் கரைசல் வரை பயன்படுத்தலாம்.

Also read... கடவுள் ராமர் ஒரு நேபாளி: அவர் இந்தியர் அல்ல.. நேபாள பிரதமரின் சர்ச்சை கருத்து..

2 மணி நேரம் சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரம் வரை தொடர்ச்சியாக இந்த ரோபோவை பயன்படுத்தலாம் என்கிறார் சுந்தரேசன். சுந்தரேசன் இந்த கண்டுபிடிப்பிற்கு இந்திய அரசின் மருத்துவ தயாரிப்பு உபகரணங்களை அங்கீகரிக்கும் சிடிஎஸ்கோ அமைப்பு தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது.அத்துடன் ஐரோப்பிய அமைப்பான சிஇ மார்க்கும் இவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்துள்ளது . இதே போல் தமிழக அரசும் தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் வழங்கினால் 67,000 ரூபாய் மதிப்பிலான இந்த இயந்திரத்தை தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் தர தயாராக உள்ளதாகவும் சுந்தரேசன் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மதுரை இளைஞரால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ அனைத்து தரப்பினரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது..
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading