• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கைலாசாவில் ஜல்லிக்கட்டு நடத்த கோரிக்கை: கொரோனா இல்லாத நாடு என்றும்‌ புகழாரம்

கைலாசாவில் ஜல்லிக்கட்டு நடத்த கோரிக்கை: கொரோனா இல்லாத நாடு என்றும்‌ புகழாரம்

நித்யானந்தா

நித்யானந்தா

கைலாச நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிகோரி மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கைலாசா என்கிற நாட்டை அறிவித்து அந்நாட்டிற்கான நாணயங்களையும் வெளியிட்டு நித்தியானந்தா ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கியபாடில்லை. நித்யானந்தாவின் நாணய வெளியீடு அறிவிப்பு வெளியான மறுநாளிலிருந்து கைலாசாவில் ஹோட்டல் வைக்க அனுமதிக்க வேண்டும், விவசாயம் செய்ய நிலம் வேண்டும், துணிக் கடை வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் அடுத்தடுத்து கோரிக்கைகளை வைக்கத் தொடங்கிவிட்டனர்.

Also read: சி.எஸ்.கே அணி வீரர்கள் 13 பேருக்கும் கொரோனா இல்லை - இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு காத்திருப்பு

அவற்றுக்கு ரியாக்ட் செய்த நித்யானந்தா, அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தனது கைலாசா நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கு பின்னரும் கோரிக்கை பட்டியல் நிறைவு பெறுவதாக இல்லை. இப்போது புதிதாக கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் என மதுரையின் ’வீர மரபு வீர விளையாட்டுக் கழகம்’ எனும் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய் தோற்று அதிகரித்துள்ளதால் கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுக்களை நடத்துவது சவாலாக உள்ளதாகவும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: