அக்கா வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய தம்பி கைது: வெடிக்காத குண்டைக் கடித்த நாய் தலை சிதறி உயிரிழப்பு..!

இவர்களுக்கு நாட்டு வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்கா வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய தம்பி கைது: வெடிக்காத குண்டைக் கடித்த நாய் தலை சிதறி உயிரிழப்பு..!
அக்கா வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய தம்பி.
  • Share this:
குடிபோதையில் வசைபாடுவதைத் தட்டிக்கேட்ட அக்கா வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசிய தம்பியை போலீசார் கைது செய்தனர். வெடிக்காத குண்டைக் கடித்த நாய் தலை சிதறி உயிரிழந்துள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே ராமகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர்கள் சசிக்குமார் - செல்வராணி தம்பதியினர். செல்வராணியின் தம்பியான 30 வயது முருகன் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த 55 வயது சின்னத்துரை என்பவருடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். மது அருந்திய பின் அக்கா செல்வராணி வீட்டிற்கு வந்து இருவரும் தகராறில் ஈடுபட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் அதுவே அவரது போதைக்கு ஊறுகாய் போல் ஆனது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் இவர்களின் தொல்லை இல்லாமல் இருந்துள்ளது. மீண்டும் டாஸ்மாக் கடை திறந்த பின் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பிய முருகன், சின்னத்துரையுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு சகோதரி வீட்டில் தகராறு செய்வதைத் தொடர ஆரம்பித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராணி இருவரையும் திட்டி எச்சரித்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த முருகன், வீட்டில் வைத்திருந்த நான்கு நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்து தன் அக்கா வீட்டின் மீது வீசியுள்ளார். ஒரு குண்டு மட்டும் வெடித்துச் சிதறியுள்ளது. போதையில் வீசியதால் மூன்று வெடிகுண்டுகள் வெடிக்காமல் வீட்டருகே விழுந்துள்ளன. அதில் ஒரு நாட்டு வெடிகுண்டை செல்வராணியின் நாய் கடித்தபோது குண்டு வெடித்து தலை சிதறி நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலமேடு போலீசார் வெடிக்காத இரண்டு நாட்டு வெடி குண்டுகளைப் பறிமுதல் செய்ததாேடு முருகனைக் கைது செய்தனர். தப்பியோடிய சின்னத்துரையைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு நாட்டு வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading