• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கைலாசாவில் நிலம் வேண்டும்; நித்தியானந்தாவுக்கு இயற்கை விவசாயி கடிதம்

கைலாசாவில் நிலம் வேண்டும்; நித்தியானந்தாவுக்கு இயற்கை விவசாயி கடிதம்

நித்தியானந்தாவுக்கு இயற்கை விவசாயி கடிதம்

நித்தியானந்தாவுக்கு இயற்கை விவசாயி கடிதம்

கைலாசாவில் விவசாயம் செய்ய தனக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என மதுரை இயற்கை விவசாயி ஒருவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • Share this:
கைலாசா என்கிற நாட்டை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ள நித்தியானந்தா, விநாயகர் சதுர்த்தி அன்று தனது நாட்டிற்கான நாணயங்களை வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார். இதைத்தொடர்ந்து பல்வேறு கிளைகள் கொண்ட மதுரை டெம்பிள் சிட்டி உணவகத்தின் கிளையை கைலாசாவில் துவங்குவதற்கு அனுமதி வேண்டி அதனுடைய உரிமையாளர் குமார் என்பவர் நித்தியனந்தாவிற்கு கோரிக்கை வைத்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்ற நித்தியானந்தா தனது நாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போது நிச்சயம் அனுமதி தரப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் உறுதி அளித்தார். இந்நிலையில் குற்றவாளியான நித்யானந்தாவை நல்லவர் போல் சித்தரிக்கும் முயற்சியில் குமார் ஈடுபடுவதாகக் கூறி அவர் மீது மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.



இந்த விவகாரம் முடிவுக்கு வருவதற்குள் இயற்கை விவசாயி பாண்டித்துரை என்பவர் நித்யானந்தாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பரம்பரைப் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் குடும்பத்தில், தான் பிறந்துள்ளதாகவும், பொறியியல் படித்துவிட்டு தற்போது இயற்கை விவசாயம் செய்து வருவதாகவும், கைலாசா தேசத்தில் மதுரை மக்களுக்கு முன்னுரிமை தருவதாகக் கூறியதற்கு இணங்க அந்த தேசத்தில் இயற்கை விவசாயம் செய்ய சிறிது நிலம் தருமாறு கோரிக்கை வைத்து பாண்டித்துரை கடிதம் எழுதியுள்ளார். இதற்கு நித்யானந்தா என்ன பதில் அளிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: