பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு...!

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு...!

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

தொல்லியல் துறை பேராசிரியர் விடுதி கட்டணத்தை எதிர்த்து போராடிய தனது துறையை சேர்ந்த மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தின்போது விடுதியில் தங்காத மாணவர்களிடம் கட்டணம் வசூலித்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையை எதிர்த்து, கடந்த ஜனவரி 27 முதல் 29 வரை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொல்லியல் துறை மாணவர்களை அத்துறையின் தலைவர் சௌந்தரராஜன் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் தோல்வி அடையச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் பேராசிரியரின் நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொல்லியல் துறை பேராசிரியர் விடுதி கட்டணத்தை எதிர்த்துப் போராடிய தனது துறையைச் சேர்ந்த மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also read... நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன்? நீதிமன்றம் கேள்வி!

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் சௌந்தரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மூன்றாவது நாளாக சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விளக்கம் அறிய பேராசிரியர் சௌந்தரராஜனை தொடர்பு கொண்டபோது, ஏற்கனவே மதிப்பெண் விவகாரத்தில் தனக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையை மனதில் வைத்து, மாணவர்கள் தன் மீது அபாண்டமாக பழி சுமத்தி, தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி முடித்துக்கொண்டார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: