அரியர் கட்டணம் செலுத்திய பொறியியல் அல்லாத மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடிவு

அரியர் கட்டணம் செலுத்திய பொறியியல் அல்லாத மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடிவு
கோப்புப் படம்
  • Share this:
பொறியியல் மாணவர்களைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்தியுள்ள அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டது. அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியது தவறு என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் பொறியியல் மாணவர்களை தவிர்த்து
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த அரியர் தேர்வு எழுத பணம் செலுத்திய மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்படி குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.


இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் குழுக்கூட்டத்தில் அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading