Home /News /tamil-nadu /

சென்னை பல்கலை. ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் முறைகேடு... சேராமலே பட்டம் பெற முயன்ற 117 பேர் சிக்கினர்

சென்னை பல்கலை. ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் முறைகேடு... சேராமலே பட்டம் பெற முயன்ற 117 பேர் சிக்கினர்

முறைகேடாக தேர்வு எழுதிய ஒவ்வொருவரும் தலா 3 லட்ச ரூபாய் வரை கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர், பிபிஏ மற்றும் பி.காம் படிப்புகளுக்கான பட்டங்களை பெறவே, முயற்சி செய்துள்ளனர்.

  • 1 minute read
  • Last Updated :
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் சேராமலேயே, முறைகேடாக 100-க்கும் மேற்பட்டோர் பட்டம் பெற முயன்றது அம்பலமாகியுள்ளது.

2020-2021ம் கல்வி ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக, சென்னை பல்கலைக் கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. அப்போது, கடந்த 20 ஆண்டுகளாக தொலைதூரக் கல்வியில் அரியர் வைத்துள்ளவர்களும், தேர்வுகளை எழுத சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தேர்வு எழுதி வெற்றி பெற்ற, 117 பேர் தங்களுக்கான தேர்ச்சி சான்றிதழை வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை அணுகியுள்ளனர். இதையடுத்து வழக்கம்போல் குறிப்பிட்ட நபர்களின் ஆவணங்களை சரிபார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது.

Also read... கோபாலபுரக் குடும்பத்தின் ஒரு முக்கியமான தூண் சரிந்துவிட்டது: சண்முகநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

தொலைதூரக் கல்வி மூலம் எந்த படிப்பிலும் சேராத அவர்கள், ஒருமுறை கூட பட்டபடிப்பிற்கான கட்டணத்தை செலுத்தியதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பட்ட படிப்பை முடித்ததாக போலி ஆவணங்களை சமர்பித்து, தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டை பெற்றது தெரிய வந்துள்ளது.

Also read... கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைவிற்கு கிராம மக்கள் அஞ்சலி!

சென்னை பல்கலைக்கழக அலுவலர்கள் சிலரே முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் நிலையில், முறைகேடாக தேர்வு எழுதிய ஒவ்வொருவரும் தலா 3 லட்ச ரூபாய் வரை கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர், பிபிஏ மற்றும் பி.காம் படிப்புகளுக்கான பட்டங்களை பெறவே, முயற்சி செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை, இன்னும் கூடுதலாக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Also read... தமிழகத்தில் உள்ள அச்சகங்களை அரசு காத்திட வேண்டும் - வைகோ!

அரியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, விசாரிக்க குழு அமைக்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
First published:

அடுத்த செய்தி