சென்னை ஐஐடியில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் பயின்று வரும் மாணவர்கள் 3 பேருக்கு சில தினங்களுக்கு முன்னர் லேசான கொரேனா அறிகுகள் இருந்ததால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் என 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று தொற்று குறைந்த அளவிலேயே உள்ளது. டெல்லியில் 100 பேரில் 6 அல்லது 7 பேருக்கு தொற்று பதிவாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 1000 பேரில் 3 பேருக்குதான் தொற்று பதிவாகிறது.
இதையும் படிங்க: பிரேக் என நினைத்து ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுனர் - சென்னை பீச் ஸ்டேஷன் ரயில் விபத்து விசாரணையில் திடுக்கிடும் தகவல்
மேலும், கொரோனா உறுதியானவர்களுக்கு மிகவும் லேசான அறிகுறிகளே உள்ளது. எனவே, தற்போது பதற்றமடைய தேவையில்லை என்று தெரிவித்தார். முன்னதாக, ஐஐடி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், ஐஐடி மாணவர்களை நேரில் சந்தித்து, நிலைமையைக் கட்டுப்படுத்தத்தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஐஐடி சென்னை நிர்வாகம் மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.