ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக அரசின் நீட் ஆய்வுக்குழு செல்லும்: பாஜக மனு தள்ளுபடி!

தமிழக அரசின் நீட் ஆய்வுக்குழு செல்லும்: பாஜக மனு தள்ளுபடி!

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அரசின் இந்த அறிவிப்பானைக்கும்  உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என  தெரிவித்த தலைமை நீதிபதி, நீட் பாதிப்பு குறித்து  மக்களிடம் தமிழக அரசு கருத்து  கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார் என  பாஜகவின் கரு.நாகராஜனுக்கு கேள்வி எழுப்பினார்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை  அமைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது. இந்த குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் நீட் தொடர்பான தங்களின் கருத்துகளை கடிதம் மூலமும், இ.மெயில் மூலமும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு அமைத்துள்ள குழுவுக்கு எதிராக தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், திராவிடர் கழக தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோரும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் படிக்க: அரசு வழக்குகளின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்...

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, குழு அமைத்த அரசின் இந்த அறிவிப்பானை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல எனவும், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க முடியும் என தலைமை நீதிபதி கருத்து  தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில்,  ஏ.கே.ராஜன் குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், நீட் தேர்வால் மட்டுமே அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதா? என மனுதாரர் தரப்புக்கு கேள்வி  எழுப்பினார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பானைக்கும்  உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என  தெரிவித்த தலைமை நீதிபதி, நீட் பாதிப்பு குறித்து  மக்களிடம் தமிழக அரசு கருத்து  கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார் என  பாஜகவின் கரு.நாகராஜனுக்கு கேள்வி எழுப்பினார். மேலுன், விளம்பரத்துக்காக இது போன்ற வழக்குகள் தொடரப்படுவதாக கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வேட்பு மனுவில் வரி பாக்கி தொடர்பான தகவலை மறைத்ததாக நத்தன் விசுவநாதன் மீது புகார்!

இதையடுத்து, மத்திய அரசு தரப்பில், அரசியல் சாசனம் 162 வது பிரிவு சட்டமன்றத்துக்கு அதிகாரம் உள்ள விஷயங்களில் சட்டம் இயற்றலாம். ஆனால் மத்திய - மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாநில அரசு, மத்திய அரசின் சட்டத்தை மீறி, சட்டம் இயற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள்,  ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் பாதிப்புகள்  தெரிய வரும் என்றும் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக தேவைப்பட்டால் நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வர முடியும் எனவும்  தெரிவித்தனர்.

மேலும் படிக்க: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் முடிவுக்கு வருகிறது!

மக்களின் தேவையை பூர்த்தி செய்வது அரசுகளின் கடமை என்றும் ஏ.கே.ராஜன் குழு அமைத்ததில் எந்த சட்ட விதி மீறல்களும் இல்லை என தெரிவித்து கரு.நாகராஜனின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கில் இடை மனுதாரர்களான திமுக, காங், மதிமுக, கம்யூ உள்ளிட்ட வாதங்களை கேட்காமலேயே நீதிபதி இந்த உத்தரவை  பிறப்பித்தார்.

Published by:Murugesh M
First published:

Tags: BJP, Neet Exam, Tamilnadu government