வேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு!

News18 Tamil
Updated: April 17, 2019, 2:25 PM IST
வேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு!
சென்னை உயர்நீதிமன்றம்
News18 Tamil
Updated: April 17, 2019, 2:25 PM IST
வேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கின்  தீர்ப்பு மாலை 4.30 மணிக்கு அளிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசனின் குடோனில், 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, அந்தத் தொகுதி மக்களவைத் தேர்தல் மட்டும் ரத்து செய்ய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் குடியரத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக சட்ட அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் அமர்வில் அவசரமாக விசாரிக்கப்பட்டது. அப்போது. “தேர்தல் நடவடிக்கைகளில் தலையிட குடியரசு தலைவருக்கு அதிகாரம் இல்லை. இத்தனை நாள் நான் பிரசாரம் செய்துள்ளது வீணாகியுள்ளது” என்று ஏசி சண்முகம் சார்பில் வாதிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவே குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் வாதிடப்பட்டது.

“தேர்தல் ரத்து செய்யக் கூடாது என்றால், பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யலாம், தேர்தலை ரத்து செய்ய தேவையில்லை என்று மனுதாரர் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

”குறிப்பிட்ட வேட்பாளரை மட்டும் எப்படி நீக்கம் செய்ய முடியும்?” என்று நீதிபதிகள் கேட்டனர்.

மறுபக்கம் தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “வேலூரில் பணம் கைப்பற்றுவதற்கு முன்னரே பணப்பட்டுவாடா நடந்துள்ளது. தேர்தல் ரத்து என்பது தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு, குடியரசுத்தலைவர் அதற்கு ஒப்புதல் மட்டுமே கொடுத்தார். இதனை, குடியரசுத் தலைவர் முடிவெடுத்ததாக கருத முடியாது” என்று கூறினார்.

விசாரணை முடிவில் வேலூரில் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணைய உத்தரவை மறு ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த வழக்கில் இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...