Home /News /tamil-nadu /

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.சி, எஸ்.டிக்கு இடஒதுக்கீடு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.சி, எஸ்.டிக்கு இடஒதுக்கீடு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் போதிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகச் செயலாளர் சத்தியமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலின, பழங்குடியினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஜனவரி 17ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் மூன்று மாநகராட்சிகளின் மேயர் பதவிகள், பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பழங்குடியினத்தவர்களுக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதேபோல, 138 நகராட்சிகளில் 20 நகராட்சித் தலைவர் பதவிகள் மட்டும் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பழங்குடியினருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 490 பேரூராட்சிகளில் 85 பேரூராட்சிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 3 இடங்கள் பழங்குடியினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது- உயர் நீதிமன்றம் உறுதி



    மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும், அரசியல் சாசன விதிகளின்படி பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கி இட ஒதுக்கீடு வழங்கப்படாததால், இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அரசாணையை ரத்து செய்து புதிய அரசாணையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.


    இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Election Commission, Local Body Election 2022

    அடுத்த செய்தி