• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • BREAKING | CAA-க்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை அப்புறப்படுத்த டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

BREAKING | CAA-க்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை அப்புறப்படுத்த டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

CAA Protest | "பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது"

  • News18
  • Last Updated :
  • Share this:
    திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை கைது செய்து அப்புறப்படுத்த தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம்  முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே, திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டங்களை தடுக்க கோரி வழக்கறிஞர் கோபிநாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதி சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரித்தது. அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடைபெறும் சட்ட விரோத போராட்டங்கள் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    அனுமதியின்றி போராட்டம் நடத்தும் அனைவரையும் அப்புறப்படுத்துமாறு டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: