• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உயர்கல்வித் துறை செயலாளரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

உயர்கல்வித் துறை செயலாளரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று 8 பேர் ஆஜராக வேண்டிய நிலையில், 7 பேர் மட்டுமே ஆஜராகினர். உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆஜராகவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மாவை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் தொலைதூரக் கல்வி மையங்களைத் தொடங்க தடை விதிக்கக் கோரி, தனியார் கல்லூரிகள் சங்கம் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

வழக்கு விசாரணையின்போது தொலைதூரக் கல்வி மையங்கள் தொடங்கப்படாது என நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனை மீறும் வகையில், தொலைதூரக் கல்வி மையங்களில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கி பல்கலைக்கழக சிண்டிகேட் நவம்பர் 28-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதையடுத்து தனியார் கல்லூரிகள் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிண்டிகேட் தீர்மானத்துக்குத் தடை விதித்ததுடன், சிண்டிகேட் உறுப்பினர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள் ஜனவரி 7-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று 8 பேர் ஆஜராக வேண்டிய நிலையில், 7 பேர் மட்டுமே ஆஜராகினர். உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆஜராகவில்லை.

பணி நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளதால் மங்கத் ராம் சர்மா ஆஜராகவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி கிருபாகரன், மங்கத் ராம் சர்மாவை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Also watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:DS Gopinath
First published: