BREAKING பேனரால் பலியான சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

Vijay R | news18-tamil
Updated: September 13, 2019, 4:25 PM IST
BREAKING பேனரால் பலியான சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
உயிரிழந்த சுபஸ்ரீ
Vijay R | news18-tamil
Updated: September 13, 2019, 4:25 PM IST
பேனர் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயபால், அவரது மகன் திருமணத்துக்காக வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் உயிரிழந்தார்.

இந்த வழக்கை தானே முன்வந்த விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென கூறியது.


மேலும் சட்ட விரோத பேனர் வைத்த அரசியல் பிரமுகர் மீதான வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் அவரிடமிருந்தும் உரிய இழப்பீடு பெற்று சுபஸ்ரீ குடும்பத்திற்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஓத்திவைத்துள்ளனர்.

Watch : சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழப்பு!

Loading...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...