முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தீபக், தீபா ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்துக்கு தாங்களே வாரிசு என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து 2016 தேர்தல் பிரமாண பத்திரத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களையும் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் உள்ள சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய தீபக், தீபா ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தீபா, தீபக் இருவரும் உரிமை கோரும் சொத்தை குறிப்பிடவும் ஆணையிட்டனர். இல்லையென்றால் வருமானவரித் துறையை பிரதிவாதியாக சேர்க்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டுவருவது நீதிமன்றத்தின் கடமை என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, ஜெயலலிதா தனது சொத்து தொடர்பாக உயில் எழுதி வைக்காததால், அவரது சொத்துகளை நிர்வகிக்க அனுமதி கோரி தீபக் சார்பில் வாரிசு உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also watch

First published:

Tags: Deepa, Jayalalithaa