Home /News /tamil-nadu /

பாரதமாதா சிலைக்கு அத்துமீறி மாலை அணிவித்த பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கத்திற்கு நிபந்தனை ஜாமீன்

பாரதமாதா சிலைக்கு அத்துமீறி மாலை அணிவித்த பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கத்திற்கு நிபந்தனை ஜாமீன்

கே பி ராமலிங்கம்

கே பி ராமலிங்கம்

பாரதமாதா நினைவாலயத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கடந்த 14ம் தேதி பாப்பாரப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
தர்மபுரி பாரதமாதா நினைவாலயத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா நினைவாலயத்தில் அத்துமீறி நுழைந்து பாரத மாதா சிலைக்கு மாலையிட்டபுகாரில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கடந்த 14ம் தேதி பாப்பாரப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜாமீன் கோரி கே.பி. ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தான் எந்த தவறு செய்யாத நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதி சதீஷ்குமார்,  ராமலிங்கத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Also Read : 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள்.. எங்கே போகிறது தமிழகம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமெனவும், உடல் நலக்குறைவு எதுவும் ஏற்பட்டால் பென்னாகரம் மாஜிஸ்ட்ரேட்டை அணுகி நிபந்தனையில் விலக்கு பெறலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Published by:Raj Kumar
First published:

Tags: Bail, BJP, Chennai High court

அடுத்த செய்தி