தவறான சிகிச்சையால் பெருங்குடலில் பாதிப்பு ஏற்பட்ட இலங்கையைச் சேர்ந்த பெண்ணுக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013-ஆம் ஆண்டில் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த ஃப்ளோரா என்பவரின் கருப்பையில் கட்டி வளர்வதாக கூறி சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, அடிவயிற்றில் வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மற்றொரு மருத்துவமனையில் சோதனை செய்தபோது பெருங்குடலில் நிரந்தர சேதம் ஏற்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கில், 40 லட்சம் ரூபாயும், அதற்கு 2014ஆம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியையும் சேர்த்து இழப்பீடாக வழங்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதி ஜி. சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hospital, Judgement, Madras High court, Treatment