சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கும் போது விசாரணை காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம்

சிறைசாலை (கோப்பு படம்)

தண்டனை சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு வழங்கும் பொழுது விசாரணை காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    சென்னை புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர் முகமது அலி. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 2019 ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்தார். மேலும், 2016 ஆம் ஆண்டு கைது செய்யபட்டது முதல் தொடர் சிறைவாசம் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் பரோல் கேட்டு சிறை கண்காணிப்பாளரிடம் முகமது அலி விண்ணப்பம் அளித்திருந்தார். சிறை விதிப்படி, மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகுதான் ஒரு மாத கால சாதாரண விடுப்பிற்கு தகுதி பெறுவார்கள். அதனடிப்படையில் விடுப்பு விண்ணப்பமானது புழல் மத்திய சிறைக்கண்காணிப்பாளரால், தண்டனை காலத்திற்கு பிறகு கணக்கிடப்பட்டு ஒரு வருடம் 7 மாத காலம் மட்டுமே பூர்த்தி செய்து இருப்பதாக கூறி நிராகரித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    Also Read : ஊராட்சி நூலகங்களில் திமுக ஆதரவு நாளேடுகளை திணிக்கும் போக்கை கைவிட வேண்டும் - சீமான்

    இதையடுத்து, சிறை கண்காணிப்பாளர் உத்தரவை ரத்து செய்து பரோல் வழங்க உத்தரவிடக்கோரி முகமது அலி தொடர்ந்த வழக்கு எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனை சிறைவாசிகளின் விடுப்பு தொடர்பான கோரிக்கைகளை பரிசீலனை செய்யும் பொழுது விசாரணை காலத்தையும் கணக்கில் கொண்டு பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், ஒன்றிய அரசு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்களின் விடுப்பு தொடர்பான மனுக்களை மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர சிறை கண்காணிப்பாளருக்கு அதிகாரம் இல்லை என கூறி பரோல் வழங்க சிறைக்கண்காணிப்பாளர் நிராகரித்து பிறப்பித்த உத்தரவினை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.

    Also Read : இது என்ன துக்ளக் ஆட்சியா? - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டம்

    மனுதரார் கோரிக்கை தொடர்பான ஆவணங்களை நான்கு வாரத்திற்குள் மாநில அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், அதனடிப்படையில் மாநில அரசு நான்கு வார காலத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
    Published by:Vijay R
    First published: