ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது..நீதிமன்றம் உத்தரவு!

குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது..நீதிமன்றம் உத்தரவு!

குட்கா

குட்கா

மத்திய அரசு கொண்டு வந்த சட்டப்படி, புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க விதிகள் வகுக்கவில்லை - நீதிமன்றம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு முழுமையான தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

ஆண்டுதோறும் இந்த உத்தரவை நீட்டித்தும்  அறிவிப்பாணைகள்  பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அதேபோல, தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல் முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், மத்திய அரசு கொண்டு வந்த சட்டப்படி, புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க விதிகள் வகுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் விளம்பரங்களை ஒழுங்குப்படுத்த மட்டுமே மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர தடையை போல ஒவ்வொரு ஆண்டும் தடை உத்தரவை நீட்டித்து அறிவிப்பானை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். மேலும், இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

First published:

Tags: Banned Pan Gutka, Chennai High court, Tamilnadu