முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கடத்தப்பட்டதாக கூறிய கவுன்சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்...! பொய்ப்புகார் அளித்த மகனுக்கு அபராதம்

கடத்தப்பட்டதாக கூறிய கவுன்சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்...! பொய்ப்புகார் அளித்த மகனுக்கு அபராதம்

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

  • Last Updated :

ராமநாதபுரத்தில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கடத்தப்பட்டதாக அவரது மகன் புகார் தெரிவித்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான கவுன்சிலர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சாத்தையா. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முதுகுளத்தூர் ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் சாத்தையா போட்டியிட்டார்.

அதிமுக கூட்டணியின் சார்பாக யாரும் போட்டியிடாத நிலையில், இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரை விட 29 வாக்குகள் கூடுதலாகப் பெற்று சாத்தையா வெற்றி பெற்றார்.

கடந்த 3-ம் தேதி சாத்தையா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது முதல் அவர் வீட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சாத்தையா காணாமல் போனதாக அவரது மகன் ராஜா முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தார். தனது தந்தை கடத்தப்பட்டிருப்பதாகவும் , அவரை கண்டுபிடித்து தரும்படியும் தனது மனுவில் ராஜா கூறியிருந்தார்.

இதையடுத்து சாத்தையாவை 9 ஆம் தேதியன்று ஆஜர் படுத்தும்படி மாவட்ட காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவரை நீதிமன்றத்தில் போலீசார் நேற்று ஆஜர் செய்தனர்.

அப்போது தான் கடத்தப்படவில்லை என்றும், தன்னுடைய மருமகன் பாலுச்சாமி வீட்டில் இருப்பதாகவும் சாத்தையா கூறினார். இதையடுத்து சாத்தையாவின் விருப்பப்படி அவரை அவரது மருமகன் வீட்டிற்குச் செல்ல அனுமதி அளித்த நீதிபதி, கடத்தப் பட்டதாகக் கூறி குடும்பப் பிரச்னையை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த ராஜாவுக்கு 15,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Also see...

top videos

    First published:

    Tags: Local Body Election 2019, Ramanathapuram