உயரதிகாரிகளின் தனி அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த நீதிமன்றம் பரிந்துரை!

உயரதிகாரிகளுக்கு எதிரான புகார்களை தவிர்க்கவும், பாலியல் தொல்லைகளிலிருந்து பெண் அதிகாரிகள், பணியாளர்களை பாதுகாக்கவும் உயர் அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென தலைமை செயலாளருக்கு பரிந்துரைத்த நீதிபதி, தன் அறையிலும் கேமரா பொருத்த உயர்நீதிமன்ற நிர்வாகப் பிரிவு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

உயரதிகாரிகளின் தனி அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த நீதிமன்றம் பரிந்துரை!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: February 14, 2019, 2:01 PM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் உள்ள உயரதிகாரிகளின் தனி அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகனுக்கு எதிராக அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.

இந்த புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. விசாகா குழுவில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதியை நியமிக்க கோரியும், முருகனை பணிமாற்றம் செய்ய கோரியும் புகார் கூறிய பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இதையடுத்து, ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீலட்சுமி பிரசாத் தலைமையில் புதிய விசாகா குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையில், தனக்கு எதிரான சிபிசி ஐடி விசாரணையை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையிலே விசாகா கமிட்டி உள்ளதால் சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீ லஷ்மி பிரசாத் தலைமையிலான விசாகா குழு, தன் விசாரணையை முடித்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஐஜி முருகனுக்கு எதிராக, பணிகள் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.உயரதிகாரிகளுக்கு எதிரான புகார்களைத் தவிர்க்கவும், பாலியல் தொல்லைகளிலிருந்து பெண் அதிகாரிகள், பணியாளர்களைப் பாதுகாக்கவும் உயர் அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென தலைமைச் செயலாளருக்கு பரிந்துரைத்த நீதிபதி, தன் அறையிலும் கேமரா பொருத்த உயர் நீதிமன்ற நிர்வாகப் பிரிவு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

Also see...

First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்