நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி
கோப்பு படம்
  • Share this:
வழக்கறிஞர் எஸ்.வி ராமமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியாவில் மார்ச் 24ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, படிப்படியாக நீட்டித்து வருவதால், குறைவான வருவாய் ஈட்டுவோர், கடுமையான சிரமத்தில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை நீட்டிக்காமல் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதால் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.



 

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதேபோன்ற கோரிக்கையுடன் இம்மானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

Also read... சென்னையில் போலீஸ், மீடியா, மாநகராட்சி என போலி ஸ்டிக்கர் ஒட்டி வாகனம் ஓட்டிய 94 பேர் மீது வழக்குஇதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கறிஞர் ராமமூர்த்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading