உத்தரவுகளை மதிக்காத போக்கு அதிகரிக்கிறது - அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனம்

சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்றத்தை அவமதிக்கும் அரசு அதிகாரிகள் குறித்து, நகரமைப்பு இயக்குனர் பியூலா ராஜேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிடுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் மதிக்காத போக்கு அதிகரித்து வருவவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சாலை அகலப்படுத்தும் பணிக்காக தன் நிலத்தை கையகப்படுத்தப் போவதாகக் கூறி, 20 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நிலத்தை விடுவிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலத்தை விடுவிக்கும்படி 2016-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

அதை நிறைவேற்றாததால் ஆனந்த் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு பிறகு மேல்முறையீடு செய்ய நினைப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதாக கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனவரி 21-ம் தேதி நகரமைப்பு இயக்குனர் பியூலா ராஜேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Also see... வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் மோசடி செய்த தாய் மகாள் கைது
Published by:Vaijayanthi S
First published: