Home /News /tamil-nadu /

தொழிலதிபரைக் கடத்தி சொத்துகளை எழுதி வாங்கிய விவகாரம்: காவல் உதவி ஆணையருக்கு முன் ஜாமீன்

தொழிலதிபரைக் கடத்தி சொத்துகளை எழுதி வாங்கிய விவகாரம்: காவல் உதவி ஆணையருக்கு முன் ஜாமீன்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபரை கடத்திய  வழக்கில் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ். இவரை பண்ணை வீட்டில் கட்டிப்போட்டு அவருடைய சொத்துகளை திருமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் எதிர் தரப்பினருக்காக எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார்.
இது தொடர்பான விசாரணை  நடைபெற்று வந்தது.

இதன் தொடர்ச்சியாக தொழிலதிபர் ராஜேஷை கடத்தி, சொத்தை எழுதி வாங்கிய புகாரில் திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட திருமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் 10 பேர் மீது சிபிசிஐடி காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.

காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் உதவி ஆணைய சிவகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ்: இரட்டைத் தலைமைதான் நல்லது- எம்.ஜி.ஆர் பேரன்

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எழும்பூர் நீதிமன்றத்தில் முன் அனுமதி பெறாமல் தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது, விசாரணைக்கு தேவைப்படுபோது விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும், சாட்சிகளையும் ஆதாரங்களையும் கலைக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஒரு வாரத்தில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடந்து, ஒரு லட்ச ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்.
Published by:Karthick S
First published:

Tags: Chennai High court, Chennai Police

அடுத்த செய்தி