• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சிபிஐ விசாரணை - மனு தள்ளுபடி

பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சிபிஐ விசாரணை - மனு தள்ளுபடி

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி பணம் மற்றும் தங்கம் கொடுத்ததாகவும் எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாமக தலைவர் ஜிகே மணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி நடைபெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி தொடர்ந்த வழக்கில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பணம் மற்றும் தங்கம் கொடுத்ததாக அங்கிருந்து தப்பிவந்த சரவணன் என்ற சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாகவும் எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் வினித் கோத்தாரி , அனிதாசுமத் முன்பு விசாரணைக்கு வந்தது .

அப்போது அரசு தரப்பில் இதுதொடர்பாக ஏற்கனவே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: