Home /News /tamil-nadu /

கோவில்களுக்கு தானமாக வழங்கும் பசுக்களை மறுதானம் செய்ய தடைக் கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கோவில்களுக்கு தானமாக வழங்கும் பசுக்களை மறுதானம் செய்ய தடைக் கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளை பாதுகாக்க உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும், கோவில்களில் கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என கண்காணிக்க குழு அமைக்கவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    கோவில்களுக்கு பக்தர்கள் தானமாக அளிக்கும் பசுக்களை மறுதானம் செய்வதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோவில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை, தனி நபர்களுக்கு மறுதானம் வழங்க அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளை பாதுகாக்க உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும், கோவில்களில் கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என கண்காணிக்க குழு அமைக்கவேண்டும் எனவும், அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், பால் கொடுக்கும் பசுக்களை மட்டுமே கோவில்களுக்கு தானமாக வழங்க வேண்டுமென அரசாணையில் உள்ள நிலையில் பால் கொடுக்காத பசுக்களும் தானமாக வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக இவற்றை மறுதானம் செய்யும் போது அவற்றை அடி மாட்டிற்காக வெளி சந்தையில் விற்கப்படுவதாகவும் வாதிட்டார்.

    இதையும் படிங்க: பிளாஸ்டிக் தடை: துளிர்க்கும் பனை ஓலைக்கொட்டான் தயாரிப்பு


    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பால் கொடுக்கும் மாட்டை மட்டுமே தானமாக வழங்க வேண்டுமென அரசாணையில் குறிப்பிடப்படவில்லை எனவும் அந்த பசுக்கள் அடிமாடாக விற்கப்படுவதாக கூறுவதற்கு ஆதாரம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், இது தொடர்பாக தம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை எனவும் பசுக்கள் காப்பாற்ற வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலை பெற்று தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டப்படியும், அரசாணைப்படியும் பசுக்களை மறுதானம் வழங்குவதில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் படிக்க: சென்னையில் 9, 237 தெருக்களில் கொரோனா பரவல்... கிராமங்களில் அதிகரிக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai High court, Madras High court, Temple

    அடுத்த செய்தி