ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரிய மனு : தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரிய மனு : தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

அண்ணாமலை

அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி என்று விசிக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமராக மோடி பதவியேற்ற எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பயன்படுத்தியதிய சொல் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அவரின் இந்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தநிலையில், சென்னை காவல்துறை ஆணையரிடம் அண்ணாமலைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

அதில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதிவால் சாதி மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : 10 % இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் - தொல்.திருமாவளவன்!

ஆனால் காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் காசி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மனுவில் எந்தவித முகாந்திரம் இல்லை என கூறி, காசியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Published by:Lakshmanan G
First published:

Tags: Annamalai, BJP, VCK