முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

அண்ணா பல்கலைகழகம்

அண்ணா பல்கலைகழகம்

தனியார் அமைப்பு சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதும், நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைக்கழகம் இடம் வழங்கியதும் சர்ச்சையாக உருவானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பிரபலங்களுக்கு போலியாக டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பைச் சேர்ந்த ராஜூ ஹரீஷின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 26ம் தேதி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. அப்போது இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் உள்ளிடோருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனியார் அமைப்பு சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதும், நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைக்கழகம் இடம் வழங்கியதும் சர்ச்சையாக உருவானது. அதன்பின்னர் இவ்விவகாரத்தில் கையெழுத்து முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி, மனித உரிமை கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ ஹரிஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், விருதுபெற்ற பிரபலங்களுக்கும், முறைகேடுகளுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

இதையும் வாசிக்க: வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை - டிஜிபி சைலேந்திரபாபு

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை மற்றும் அரசு வழக்கறிஞர் தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

First published:

Tags: Anna University