• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் பாலியல் தொழிலை அனுமதித்த அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னையில் பாலியல் தொழிலை அனுமதித்த அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    லஞ்சம் பெற்றுக்கொண்டு சென்னையில் பாலியல் தொழிலை அனுமதித்த இரு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை 2 மாதத்தில் முடித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் விபச்சார தடுப்புப் பிரிவில் ஆய்வாளர்களாக பணியாற்றிய சாம் வின்சென்ட், சரவணன் ஆகிய இருவரும், பாலியல் தொழில் நடத்துபவர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சென்னை நகரில் பாலியல் தொழிலை அனுமதித்ததாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின.

    இதுசம்பந்தமாக விசாரணை நடத்திய சென்னை காவல் ஆணையர், இரு ஆய்வாளர்களையும் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றி உத்தரவிட்டார். இவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்யக் கோரி அக்பர் அகமது என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்த இரு ஊழல் அதிகாரிகளும் காவல் துறையில் பணியில் நீடிக்க தகுதியற்றவர்கள் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், அவர்களைபணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.

    இதையடுத்து, இரு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை இரு மாதங்களுக்குள் முடித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    வீடியோ பார்க்க: ஆசையுடன் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: