தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பாஜக நிர்வாகியின் ட்விட்டர் பதிவு கடுமையான செயல் என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கொல்லப்படுவதாக போலி வீடியோக்கள் பதிவிட்டு வதந்தி பரப்பியதாக, உத்தரப் பிரதேச பா.ஜ.க செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ராவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 12 வாரங்கள் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தார். வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற 12 வாரம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தைத் தொடர்ந்து ஜாமீன் வாங்கிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
எனவே, முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிரசாந்த் குமார் உம்ராவ் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வீடியோக்களை தான் உருவாக்கவில்லை என்றும், அதனை Forward மட்டுமே செய்ததாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், மனுதாரர் பதிவிட்ட வீடியோ பதிவை சுமார் 5 லட்சம் பேர் பார்த்ததாகவும், இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, மனுதாரரின் செயல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியதாகவும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் உயிருக்கும், உடமைக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உருவானதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
விரைவில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை - அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சேதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Migrant Workers