முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகள் : அக்டோபர் 12-ம் தேதி இறுதி விசாரணை

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகள் : அக்டோபர் 12-ம் தேதி இறுதி விசாரணை

எஸ்.பி வேலுமணி

எஸ்.பி வேலுமணி

அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்பு துறை, எஸ் பி வேலுமணி சார்பாக ஆஜரான வழக்கறிஞரிஞர்கள் 2018ல் டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது முதல் வழக்கு இந்த அமர்வுக்கு மாற்றப்பட்டது குறித்த விவரங்களை விளக்கினர்.

  • Last Updated :
  • Chennai, India

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவித்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

Also Read : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி- காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்றும் வழக்கறிஞர் மோகன் ஆகியோர்  2018ல் டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது முதல் வழக்கு இந்த அமர்வுக்கு மாற்றப்பட்டது குறித்த விவரங்களை விளக்கினர்.

இதையடுத்து, மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். மேலும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

top videos
    First published:

    Tags: Arapor iyakkam, Madras High court, Pending cases, SP Velumani