• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப உறவு மேற்கொண்டால் குற்றமல்ல! உயர் நீதிமன்றம் கருத்து

16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப உறவு மேற்கொண்டால் குற்றமல்ல! உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

தற்போது, 18 வயதிற்கு உட்பட்டோரை திருமணம் செய்தால் கூட, இச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வழிவகை உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பதினாறு வயதிற்கு மேற்பட்டவர்கள் விருப்ப உறவு கொள்வதை குற்றமாக கருதக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

    நாமக்கல்லைச் சேர்ந்த சபரிநாதன், அதே ஊரை சேர்ந்த பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கீழமை நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதன் மேல்முறையீட்டு மனு மீதான இன்றைய விசாரணையில், உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. தான் கடத்தப்படவில்லை என சிறுமி அளித்த வாக்குமூலத்தை கருத்தில் கொள்ளாமல் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

    அத்துடன், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப உறவு கொண்டால் குற்றமல்ல என, போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. தற்போது, 18 வயதிற்கு உட்பட்டோரை திருமணம் செய்தால் கூட, இச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வழிவகை உள்ளது. மேலும், போக்சோவில் 18 வயதிற்கு உட்பட்டவர் சிறுமி என்பதை 16 வயதாக குறைக்கவும் ஆலோசனை வழங்கியுள்ளது.

    இதுதொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவில், ‘பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் காரணத்தை ஆராய மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப உறவு கொண்டால் குற்றமல்ல என போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். பதின்பருவ உறவு பற்றிய திரைப்படங்களில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: