• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இளையராஜா பாடல்களை அனுமதியின்றி மேடைகளில் பாடுவதற்கு உயர் நீதிமன்றம் தடை!

இளையராஜா பாடல்களை அனுமதியின்றி மேடைகளில் பாடுவதற்கு உயர் நீதிமன்றம் தடை!

 இந்த விருதில் ரூ. 1,00,000, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை கேரளா அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

 இந்த விருதில் ரூ. 1,00,000, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை கேரளா அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் அனுமதி பெற்ற பின்னரே அவரது பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இளையராஜா பாடலை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாக பாடக்கூடாது என்று அவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சில வருடங்களாக தனது பாடல்களுக்கான காப்புரிமை பிரச்னையில் இளையராஜா தீவிரமாக இயங்கி வருகிறார்.

    இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் என்று பல இடங்களிலும் தனது பாடல்கள் மூலம் ஒருசிலர் வருவாய் ஈட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டி வந்தார்.

    காப்புரிமை விவகாரத்தில் மற்ற இசையமைப்பாளர்கள் செய்வதையே நான் செய்கிறேன்; இது காலம் தாழ்ந்த செயல் என்றும் அவர் விளக்கம் கூறியிருந்தார்.

    இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த பாடல்களை, அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம் கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் தன்னுடைய அனுமதி பெறாமல் பயன்படுத்த தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த நிரந்திர தடை விதித்து நீதிபதி அனிதா சுமந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், அவரது பாடல்களை திரையரங்குகளை தவிர வேறு எங்கும் பயன்படுத்த கூடாது எனவும் குறிப்பாக ஆன்லைன் உள்ளிட்ட ரேடியோ நிறுவனங்கள், இசை போட்டிகள் உள்ளிட்டவைகளில் இளையராஜாவின் அனுமதி பெறாமல் அவரது பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, இளையராஜாவின் பாடல்களுக்கு 10 ஆண்டிற்கான உரிமை உள்ளதால், பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டு அகி இசை நிறுவனம் தொடர்ந்த வழக்கையும் நீதிபதி அனிதா சுமந்த் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: