சிலிண்டர் டெலிவரி பணியாளர்களுக்கு உரிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கோப்புப் படம்

எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் சிவக்குமார் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

 • Share this:
  சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு முழு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்ய உத்தரவிடக் கோரி, எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் சிவக்குமார் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

  இதுதொடர்பான விசாரணையின் போது, கிடங்குகளில் சிலிண்டர் நிரப்புவது, டெலிவரி பணிகளில் ஈடுபடுவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தியதாக ஐஓசி, பாரத் பெட்ரோலியம், ஹெச்.பி. தெரிவித்தன

  கொரோனா பாதித்த பணியாளருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு காப்பீடு தொகையும், மரணம் ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் கருணை தொகையும் பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்ததைச் சுட்டிக்காட்டின.

  எனவே, மேற்கொண்டு எந்த உத்தரவுகளை பிறப்பிக்க தேவையில்லை என கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: